திருச்செந்தூர் கோயிலில் திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2013 10:01
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தக்கார் கோட்டை மணிகண்டன் தலைமையில் திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் நடந்தது. போட்டியில் திருச்செந்தூர் பகுதி பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு கோவில் சார்பில் கோவில் கோவிந்தம்மாள் ஆதித்தனர் திருமண மண்டபத்தில் வைத்து திருப்பாவை, திரும்வெம்பாவை பாடல் போட்டிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் தலைமை வகித்தார். கோவில் இணை ஆணையர் சுதர்சன் போட்டியினை துவக்கி வைத்தார். திருச்செந்தூர் வட்டாரத்திலுள்ள இந்து துவக்கப்பள்ளி, ஸ்ரீசரவணய்யர் நடுநிலைப்பள்ளி, செந்தில்குமரன் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளிட்ட பல பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பாடினர். நடுவர்களாக தமிழாசிரியர்கள் புலவர் கோபால், குலசை முத்தரசு, வேலாண்டி ஒதுவார் ஆகியோர் செயல்பட்டனர். கோவில் பணியாளர்கள் மகாமுனி தியாகராஜன், வெங்கடேஷ், விடுதி மேலாளர் சிவநாதன், கருணை இல்ல காப்பாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பாவை திருவெம்பாவை பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை (ஜன.8ல்) பரிசுகள் வழங்கப்பட உள்ளது.