உடுமலை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் 24ல் ஏகதின லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2026 12:01
உடுமலை: உடுமலை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், ஏகதின லட்சார்ச்சனை வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.
உடுமலை நெல்லுக்கடை வீதியில் ஸ்ரீ சவுந்திரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் 24ம் தேதி ரதசப்தமியை முன்னிட்டு, ஸ்ரீ சவுந்திரராஜ பெருமாளுக்கு, ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமத்தால் லட்சார்ச்சனை நடக்கிறது. அன்று காலை, 6:30 மணிக்கு நித்ய திருவாராதனமும், 7:30 மணிக்கு லட்சார்ச்சனை துவக்கமும், முற்பகல் 11:30க்கு பஞ்சோப நிஷத் மூலமந்த்ர ேஹாமமும், மஹா திருமஞ்சன அபிேஷகமும் நடைபெறுகிறது. இரவு 8:00 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியும், இரவு, 8:30 மணிக்கு மகா தீபாராதனையும், சர்வதரிசனமும் நடக்கிறது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.