ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2026 11:01
அவிநாசி: அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே புலிப்பார் ஊராட்சி, ஈசக்கண்ணன்புதுார் கிராமத்தில், எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை 9.15 – 10:15 மணிக்குள் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, வேதிகா அர்ச்சனை மற்றும் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கரடிக்கோவில் பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். விழாவை முன்னிட்டு ஈசகண்ணன்புதுார் கிராம பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.