ஆனைமலை அன்னை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில், கடந்த, 14ம் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. நேற்றுமுன்தினம் மாலை, 4:00 மணிக்கு கும்பஸ்தாபனம் நடந்தது. இன்று காலை, 9:35 மணிக்கு மேல், 10:25 மணிக்குள் அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மதியம், 12:30 மணிக்கு மாவிளக்கு பூஜை, திருக்கல்யாண விருந்து நடந்தது. இன்று காலை, 10:30 மணிக்கு திருஊஞ்சல் உற்வசம், வடை பாயாச பூஜை, மாலை, 5:30 மணிக்கு பூவோடு, வானவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. 25ம் தேதி காலை, 7:45 மணிக்கு கொடி இறக்குதல், மகா அபிேஷகம், 10:30 மணிக்கு விசேஷ அலங்கார பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. மாலை, 4:35 மணிக்கு மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா நடக்கிறது.