ஸ்ரீ சத்ய சாய் சேவா சங்கம் சார்பில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2026 11:02
கோவை; ஸ்ரீ சத்ய சாய் சேவா சங்கம் சார்பில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் பகவான் சத்திய சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா மந்திரில் நடந்தது. .இதில் கோவை மற்றும் கோவை நகர பகுதியில் அமைந்துள்ள பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது காலை 9 மணி அளவில் தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.