Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரம்மோற்சவ விழா; சந்திர பிரபை ... ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 50 மூத்த தம்பதிக்கு கவுரவிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் 50 மூத்த தம்பதிக்கு கவுரவிப்பு

பதிவு செய்த நாள்

10 பிப்
2026
05:02

திருத்தணி: திருத்தணி மற்றும் சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, கோவில் நிர்வாகம் சார்பில் மூத்த தம்பதியருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


தமிழக அரசின் ஹிந்து அறநிலைய துறை சார்பில், மூத்த தம்பதியருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு செய்தல் நிகழ்வு நடத்தப்படும் என, அறநிலையத்துறை அமைச்சர், சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, மணிவிழா கண்ட, 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள தம்பதியர், திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் முதல் முறையாக, கடந்தாண்டு நவ., 10ம் தேதி 10 தம்பதியர் கவுரவிக்கப்பட்டனர். இன்று இரண்டாவது முறையாக, முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பு செய்யப்படும் நிகழ்வு மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் நடந்தது. தில்,கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர், 50 மூத்த தம்பதியருக்கு மலர் மாலை அணிவித்து, புடவை, வேட்டி, சட்டை பூ, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, கண்ணாடி வளையல் உள்ளிட்டவை வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கும்மிடிப்பூண்டி சிறுவாபுரி முருகன் கோவில் சார்பில் இன்று 43 மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடந்தது. ஹிந்து சமய அறநிலைய துறையின் திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அனிதா தலைமையில், சிறுவுாபுரி அகத்தீஸ்வரன் கோவிலில் நடந்த நிகழ்வில், செயல் அலுவலர் மாதவன், தலைமை குருக்கள் ஆனந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், 2,500 ரூபாய் மதிப்புள்ள, 11 வகை பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பை, தம்பதியருக்கு வழங்கி சிறப்பு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar