Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ... இந்திலி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை; அபிஷேக ஆராதனை இந்திலி முருகன் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்துார் சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
குன்றத்துார் சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

12 பிப்
2026
01:02

குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது.


குன்றத்துார் சேக்கிழார் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. உபயதாரர்கள் அளித்த 3.35 லட்சம் ரூபாயில் சமீபத்தில் இக்கோவில் புனரமைக்கப்பட்டது. மேலும், கோவில் அருகில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பசுக்கள் காப்பகம், 9.75 லட்சம் ரூபாய் மதிப்பில் சொற்பொழிவு மண்டபம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டன. இதையடுத்து, சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை காலை 11:30 மணிக்கு, சிவாச்சாரியார்கள் முன்னிலையில், கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின், மாலை 6:00 மணிக்கு சேக்கிழார் சுவாமி வீதி உலா வந்து, பக்தர் களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, காலை 10:00 மணிக்கு, கோவில் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட பசுக்கள் காப்பகம் மற்றும் சொற்பொழிவு மண்டபம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. இந்த கும்பாபிஷேக விழாவில், காஞ்சிபுரம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சேக்கிழார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நித்தியராமன், அறங்காவலர் பத்மினி கண்ணப்பன். கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, குன்றத்துார் நகராட்சி தலைவர் சத்தியமூர்த்தி, குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், நகராட்சி கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar