குருவாயூர் கோயிலின் சிறப்புகளை விளக்கும் ஆன்மீக அருங்காட்சியகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2026 01:02
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவின் தல வரலாறு, கலாச்சாரம் மற்றும் கலைப் பெருமைகளை உலகறியச் செய்யும் வகையில் பிரம்மாண்டமான ஆன்மீக அருங்காட்சியகம் (Spiritual Museum) அமைக்கப்பட உள்ளது.
கேரள லலிதகலா அகாடமியுடன் இணைந்து குருவாயூர் கோவில் நிர்வாகம் இத்திட்டத்திற்கான வரைபடத்தைத் தயாரித்து வருகிறது. கலை மற்றும் வரலாற்றின் சங்கமம் இந்த அருங்காட்சியகம் குருவாயூரின் ஆன்மீக மற்றும் சமூக வரலாற்றைப் பறைசாற்றும் ஒரு மையமாகத் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி சீரோத் கூறியதாவது: மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி, பூந்தானம் போன்ற மகான்களின் பங்களிப்புகள். மானவேத ராஜாவின் கலை வடிவமான கிருஷ்ணகீதி, கலை வடிவத்திலிருந்து உருவான கிருஷ்ணனாட்டம் மற்றும் மம்மியூர் கிருஷ்ணன் நாயர் பாணி சுவர் ஓவியங்கள். செம்பை வைத்தியநாத பாகவதரின் இசைப் பாரம்பரியம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க குருவாயூர் சத்தியாகிரகம். புகழ்பெற்ற குருவாயூர் கேசவன் உள்ளிட்ட யானைகளின் வரலாறு மற்றும் ஆதிசங்கரர் வகுத்த பூஜை முறைகள். இவை அனைத்தும் ஆடியோ, டிஜிட்டல் திரைகள் மற்றும் பழமையான ஓலைச்சுவடிகள் மூலம் பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இங்கு விளக்கப்படும். நான்கு மாடி கட்டிடம்யானைக்கோட்டைக்கு அருகில் அமையவுள்ள இந்த அருங்காட்சியகம் நான்கு மாடிகளைக் கொண்ட நவீன கட்டிடமாக இருக்கும். இதற்கான கட்டுமானப் பணிகளை திருச்சூரைச் சேர்ந்த பிரபல கட்டிடக் கலைஞர் வினோத்குமார் மேற்கொள்கிறார். மேலும், தொல்லியல் மற்றும் கலை வரலாற்று நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் இது வடிவமைக்கப்பட உள்ளது.
கேரளாவின் முன்னோடித் திட்டம்; "கேரளாவில் ஒரு கோவிலைச் சார்ந்து இவ்வளவு விரிவான ஆன்மீக அருங்காட்சியகம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை" என்றார்.