Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவராத்திரி; குமரி மாவட்டத்தில் ... வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் மகாசிவராத்திரி விழா வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேந்தமங்கலம் சிவன் கோவிலில் சிவராத்திரி மகோத்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சேந்தமங்கலம் சிவன் கோவிலில் சிவராத்திரி மகோத்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2026
09:02

பாலக்காடு; சேந்தமங்கலம் சிவன் கோவிலில் சிவராத்திரி மகோத்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்லேங்குங்கரை பகுதியில் உள்ளது கீழேடம் சேந்தமங்கலம் சிவன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் சிவராத்திரி மகோத்சவம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுவது வழக்கம்.

நடப்பாண்டு மகோத்சவம் பிப்., 8ம் தேதி முதல் தொடங்கியது. தொடர்ந்துள்ள நாட்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும்.கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மகோத்சவத்தின் சிறப்பு நாளான நேற்று காலை 4:30 மணிக்கு நடை திறப்புடன் விழா ஆரம்பித்தது. காலை 6:00க்கு கேரள பாரம்பரிய கலை வடிவமான சாக்கியார்கூத்து என்ற நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 7:30 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்வு நடந்தது. இதையடுத்து உற்சவமூர்த்தி கல்பாத்தி ஆற்றுக்கு ஆறாட எழுந்தருளும் வைபவம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கோவில் சன்னதியில் வந்தடையும் உற்சவம் மூர்த்தி செண்டை மேளம் முழங்க நந்திலத்து கோவிந்த கண்ணன் என்ற யானை மீது எழுந்தருளி கோவிலை ஏழு முறை வலம் வர நூற்றுக்கணக்கான பக்தர்கள் கைலாசபதே போன்ற தோஷங்கள் எழுப்பி பின் தொடர்ந்து வலம் வந்தன. இந்த வைபவம் கண்டு உற்சவம் மூர்த்தியின் ஆருள் பெற ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.

மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் சுற்றுலாக்கு ஏற்றும் நிகழ்வையடுத்து நிறமாலை தரிசனம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சயனபிரதிக்ஷணம் செய்து வழிபடும் நிகழ்வு நடந்தது. இரவு நடந்த கலை நிகழ்வுடன் மகோத்சவம் நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கங்கை நீரை சாதுக்கள் ... மேலும்
 
temple news
கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ஆபத்சஹாய ... மேலும்
 
temple news
புதுச்சேரி; குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட ... மேலும்
 
temple news
நாகர்கோவில்;சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar