வகுரணி காமாட்சியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு; மகாசிவராத்திரி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2026 05:02
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வகுரணியில் காமாட்சியம்மன் கோயில் மகாசிவராத்திரி விழாவில் கோடை காலத்தை வரவேற்கவும், கிருமிநாசினியாகவும் மஞ்சள் நீராட்டு விழா நடப்பது வழக்கம். சந்தைப்பட்டி, குறுக்கம்பட்டி, கணவாய்ப்பட்டி, நாவார்பட்டி, அயோத்திபட்டி பகுதி மக்கள் வேப்பிலை, மஞ்சள் நீர் எடுத்து ஊர்வலமாக கோயிலை வலம் வந்து அங்குள்ள தொட்டியில் ஊற்றினர். பின்னர் அதில் இருந்து கொஞ்சம் எடுத்துச்சென்று வீடுகளில் தெளித்தனர். முறைப்பெண், முறைப்பையன்கள் மீது தொட்டி மஞ்சள் நீரை தெளித்தனர். ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழாவின் நிறைவாக இந்நிகழ்ச்சி நடக்கிறது.