ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் கர்நாடக மடாதிபதி தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2026 04:02
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலுக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்திராதி மடத்தின் மடாதிபதி சத்யாத்ம தீர்த்தர் வருகை தந்தார். அவருக்கு ஸ்ரீமுஷ்ணம் உத்திராதிமடத்தின் மேலாளர் பூவராகமூர்த்திராவ் தலைமையில் மத்வர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மடாதிபதி பூவராகசுவாமி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் உற்சவ மூர்த்தி யக்ஞவராகன் ஸ்ரீதேவி பூதேவியோடு உத்திராதி மடத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் கர்நாடக மாநிலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.