Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி ...  விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மயானக்கொள்ளை திருவிழா விமரிசை  விருத்தாசலம் மணிமுக்தாற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை கோலாகலம்
எழுத்தின் அளவு:
 புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 பிப்
2026
05:02

புட்லுார்: புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று மயான கொள்ளை சூறை திருவிழா கோலாலகமாக நடந்தது.


திருவள்ளூர் அடுத்து புட்லுாரில் அங்காள பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மயான சூறை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. நடப்பாண்டிற்கான விழா, கடந்த 15ம் தேதி பந்தக்கால் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டினர்.‘ மஹா சிவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மயான சூறை விழா இன்று நடந்தது. மயான சூறை விழாவை முன்னிட்டு நேற்று, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து மயானத்தில் எழுந்தருளினார்.


பின், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், மயானத்தில் கொள்ளையடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில், சென்னை, திருவள்ளூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர். திருமழிசை திருமழிசை பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 16ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா, கடந்த 11ம் தேதி காலை 6:00 மணிக்கு பந்தக்கால் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நடந்தது. அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். திருத்தணி திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், மயானச் சூறை பிரம்மோற்சவ விழா, கடந்த 15ம் தேதி இரவு பெரியாண்டவர் விழாவுடன் துவங்கியது. நேற்று முன்தினம் சிவராத்திரி கரகம் ஊர்வலம் நடந்தது. பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று மயானச்சூறை விழா நடந்தது. நேற்று மதியம் 1:30 மணிக்கு உற்சவர் அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி, கரக ஊர்வலத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று திருத்தணி நந்தி ஆற்றின் கரையில் எழுந்தருளினார். ஆற்றில் மயானச்சூறை நடந்தது. நாளை முதல் தினமும் இரவு ரிஷபம், நாகம், அன்னம், யானை, குதிரை, புலி, கேடயம் போன்ற வாகனங்களில் உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar