Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசிக்களரி திருவிழாவில் கொதிக்கும் ... பீடத்துடன் 51 அடி உயர, 65 டன் ஐம்பொன் ஆதிபராசக்தி சிலை: சேலம் கோவிலுக்கு அனுப்பி வைப்பு பீடத்துடன் 51 அடி உயர, 65 டன் ஐம்பொன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:
 காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தேரோட்டம் விமரிசை

பதிவு செய்த நாள்

27 பிப்
2026
04:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான மாசி மாத பிரம்மோத்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வெள்ளி விருஷப வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும், எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். இரண்டாம் நாள் உத்சவமான கடந்த 22ம் தேதி காலை மகர வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் வீதியுலா வந்தார். மூன்றாம் நாளான கடந்த 23ம் தேதி காலை தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும், நான்காம் நாள் உத்சவமான கடந்த 24ம் தேதி காலை தங்க சூரிய பிரபையிலும், இரவு தங்க ஹம்ஸ வாகனத்திலும் காமாட்சியம்மன் வீதியுலா வந்தார்.. ஐந்தாம் நாள் உத்சவமான கடந்த 25ம் தேதி காலை தங்க பல்லக்கிலும், இரவு நாக வாகனத்திலும், ஆறாம் நாள் உத்சவமான காலை முத்து சப்பரத்திலும், இரவு தங்க கிளி வாகனத்திலும் காமாட்சியம்மன் உலா வந்தார். இதில், ஏழாம் நாள் உத்சவமான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar