Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோனியம்மன் கோவிலில் மாசி ... குன்னூர் ஐயப்பன் கோவில்களில் கொடிமர பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் குன்னூர் ஐயப்பன் கோவில்களில் கொடிமர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சக்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு.
எழுத்தின் அளவு:
மகா சக்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு.

பதிவு செய்த நாள்

03 மார்
2026
02:03

பந்தலூர்; பந்தலூர் அருகே அத்திக்குன்னா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா 24ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமம், மஹா அபிஷேகம், தீபாராதனை கொடியேற்றத்துடன் துவங்கியது.

25 ஆம் தேதி மகா அபிஷேகத்துடன் தேர் முகூர்த்தக்கால் ஊன்றுதல் நிகழ்ச்சியும், அன்னதானம் நடந்தது.26 ஆம் தேதி பரிவார மூர்த்தி களுக்கு மகா அபிஷேகம் விசேஷ பூஜைகள், அன்னதானம், அன்று இரவு அம்மன் வீதி உலா நடந்தது. வெள்ளிக்கிழமை மகா அபிஷேகம், தீபாராத நிமிடம் அன்னதானம் மற்றும் அம்மன் வீதி உலா நடந்தது. சனிக்கிழமை சிறப்பு பூஜைகள், கஞ்சி வழங்குதல், அன்னதானம், அம்மன் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன், அலகு குத்துதல், பறவை காவடி ஊர்வலம், பொங்கல் பூஜை, அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தேர் ஊர்வலம் வடம் பிடித்து துவக்கி வைக்கப்பட்டது. எம்.எல். ஏ. பொன் ஜெயசீலன், கோவில் தர்மகர்த்தா கருப்பையா, தலைவர் குமார், தலைமையிலான எஸ்டேட் நிர்வாகத்தினர், தேயிலை தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பெரியவர்கள் வடம் பிடித்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு கோவிலை வந்தடைந்தது. விழாவில் செண்டை மேளம் மற்றும் தப்பாட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா மற்றும் தலைவர் தலைமையில், செயலாளர் பி. ராஜா, பொருளாளர் கே. ராஜா, துணைத் தலைவர் ரமேஷ், துணைச் செயலாளர் ராமன், ஆலோசகர் அர்ஜுனன் தலைமையில் எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், மகளீர் அமைப்பினர், இளைஞர் குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar