Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028 துலாம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028 துலாம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (6.3.2026 முதல் 24.4.2028 வரை)
கன்னி : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028
எழுத்தின் அளவு:
கன்னி : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028

பதிவு செய்த நாள்

04 மார்
2026
11:03

உத்திரம்: எச்சரிக்கை அவசியம்


ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசி நாதனாகவும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி சூரியனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடங்களுக்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவராகிறார். உத்திரம் 1ம் பாதத்தினருக்கு சனி அஷ்டம ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியாகவும் சஞ்சரிக்க உள்ளார். இதனால் 1ம் பாதத்தினருக்கு அஷ்டம சனியாக குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடிகளையும், உடல்நிலையிலும் செல்வாக்கிலும் பின்னடைவையும் ஏற்படுத்துவார். மனதில் குழப்பத்தையும் வேதனையையும் உண்டாக்குவார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 7ம் இடத்தில் சஞ்சரித்து தவறான நட்புகளால் சங்கடத்தை உண்டாக்குவார். கணவன் மனைவிக்குள் பிரச்சனையை அதிகரிப்பார். நட்பு வட்டத்தில் விரிசலை ஏற்படுத்துவார். உடல்நிலையில் பாதிப்பை உருவாக்குவார். மனதில் குழப்பத்தை அதிகரிப்பார் என்றாலும், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்தநிலை. திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் மாற்றம் ஏற்படும். 

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வரவும் சேமிப்பும் அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். பொறுப்பும் பதவியும் தேடிவரும்.

ராகு - கேது சஞ்சாரம்
உத்திரம் 1ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 முதல் ஆறாமிட ராகுவால் அல்லல்கள் அகலும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13, 2026 வரை சத்ரு ஜெய ஸ்தான ராகுவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். எதிர்ப்பு, பகை, வழக்கு என்பதெல்லாம் உங்களைக்கண்டு பயந்தோடும்.
உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருத்துவச்செலவு குறையும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டமும் வெற்றியும் தேடிவரும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1ம் பாதத்தினருக்கு
மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில், சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உயர்கல்வி கனவு நனவாகும். குழந்தை பாக்யம் உண்டாகும். கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் அஷ்டம சனியின் பாதிப்பு விலகும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானின் பாதிப்பு விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் உத்தியோகம், தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வீடு, வாகனம் என்று வாங்குவதாலும் ஆடம்பர செலவுகளாலும் கையிருப்பு கரையும்.

பொதுப்பலன்
யோகக்காரகன் ராகுவும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும், செவ்வாய், சூரியன் சஞ்சாரங்களும், கடகம், கன்னியில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானுக்கு குருப்பார்வை கிடைப்பதாலும் அஷ்டம சனி, கண்டக சனி என்ற பயம் உங்களை விட்டு விலகும். எடுத்த வேலைகள் தடையின்றி நடந்தேறும். தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீண் செலவுகள் கட்டுப்படும். உடல்நிலை சீராகும். புதிய சொத்து சேரும். உயர் கல்வி, திருமணம், வேலை என்ற கனவுகள் நனவாகும். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

தொழில் 
பிறருக்கு வெளிச்சமாக வாழ்ந்துவரும் உங்களுக்கு தொழிலில் நெருக்கடி, கூட்டுத்தொழிலில் பிரச்சனைகள் என்று ஏற்பட்டாலும் அனைத்தையும் சமாளித்து முன்னேற்றமடைவீர்கள். அரசு ஒப்பந்தம், ஷேர் மார்க்கெட், எக்ஸ்போர்ட், ட்ராவல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், வாகன விற்பனை, சின்னத்திரை, சினிமா, யூடியூப் தொழில்கள் வளர்ச்சி அடையும். ஒப்பந்ததாரர் களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

பணியாளர்கள் 
உழைப்பால் உயர்வடைந்துவரும் உங்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள், சங்கடங்கள் யாவும் விலகும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். பதவி உயர்வு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்
திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல் நிலை சீராகும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட உறவினர்கள் உங்களிடமே உதவி கேட்டு வருவர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இக்காலத்தில் புதிய நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையாகும். குடும்பத்தினருக்கு தெரியாமல் வெளியூர் பயணம் செல்வது, பிறரை நம்பி செயல்படுவது,  முதலீடுகள் செய்வது உங்களை சங்கடத்திற்கு ஆளாக்கும் என்பதால் உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வது நன்மையாகும்.

கல்வி 
படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதால் பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், பொறியியல், சட்டம் படிக்கும் கனவு நனவாகும். ஒரு சிலர் வெளிமாநிலங்கள், வெளிநாட்டிற்கு உயர் கல்விக்காக செல்வீர்கள்.

உடல்நிலை 
தொற்றுநோய், பரம்பரைநோய், விபத்து என்று மருத்துவமனைகளுக்குச் சென்று வந்தவர்கள் நிலைமாறும். நோயின் தன்மையைக் கண்டறிந்து சிகிச்சை பெற்று  குணமடைவீர்.

குடும்பம் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் பிரச்சனைகள் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கடன் வாங்கியாவது வீடு மனை என்று வாங்குவீர்கள். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதுடன் விட்டுக்கொடுத்தும் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் மேற்கல்வி, திருமணம் என்பதில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

பரிகாரம் :லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.


அஸ்தம்: நினைத்தது நடந்தேறும்


மனக்காரகன் சந்திரன், வித்யாகாரகன் புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரித்து அபரிமிதமான பலன்களை வழங்கி, உற்சாகமாக நடைபோடவைத்த சனி பகவான், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான மீனத்தில் சஞ்சரிக்கப் போகிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் வழங்கிவந்த நற்பலன்கள் இக்காலத்தில் தொடருமா! அல்லது சங்கடங்களுக்கு ஆட்பட நேருமா என்ற கேள்வி உங்களுக்கு இருக்கும். சப்தம சனியை கண்டக சனி என்போம். ராசிக்கு சம சப்தமாக சனி சஞ்சரிக்கும் காலத்தில் அவரின் நேரடிப்பார்வைக்கு நீங்கள் ஆளாகும் காலம் இதுவென்பதால் உங்கள் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகும். அலைச்சல் அதிகரிக்கும். இருக்கும் இடத்தைவிட்டு வெளியூர் சென்று வசிக்க வேண்டிய நிலை உருவாகும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். பங்குதாரர்களுடன் பகைமை உண்டாகும். எதிர்பாலினரால் தடுமாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இணக்கமற்ற நிலை உண்டாகும். நட்பாக இருந்தவர்களுடன் இடைவெளி உண்டாகும் என்பது பொது விதி என்றாலும், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலை. நடைபெற்று வரும் திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் மாற்றம் ஏற்படும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் சனி பகவானால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். தாய் தந்தையரின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். குடும்பத்திற்குள் இணக்கமான நிலை உண்டாகும். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
நவ.13, 2026 வரை ஆறாமிட ராகுவால் நினைத்ததை சாதிக்க முடியும். விரும்பியதை அடைய முடியும். எதிர்ப்பை வெல்ல முடியும். அச்சமூட்டிய நோய்கள் விலகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். நவ. 13, 2026 முதல் பதினொன்றாமிட கேதுவால் முடங்கிய தொழில் முன்னேற்றமடையும். வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். எடுத்த காரியம் யாவும் வெற்றியாகும். எதிர்பார்த்த உயர்வினை அடைய முடியும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் கண்டக சனியினால் உண்டாகும் சங்கடங்களில் இருந்து குரு பகவான் உங்களைப் பாதுகாப்பார். படிப்பு, வேலை, திருமணம், வீடு, வாகனம், வசதி, அந்தஸ்து என்று உங்கள் நிலை உயரும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வரவும் செலவும் சமமாக இருக்கும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு ஜெயமாகும். செல்வாக்கு உயரும்.

பொதுப்பலன்
சனி பகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும் ராகு, கேது சஞ்சார நிலைகளும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும், கண்டக சனியால் ஏற்படும் சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். எண்ணிய காரியங்கள் நடந்தேறும். செய்யும் தொழில் லாபமாகும். பார்க்கும் வேலை முன்னேற்றமாகும். குடும்பத்தில் மங்கள ஒலி கேட்கும். உடலில் தோன்றிய நோய் போகும். சொத்தும் செல்வாக்கும் உண்டாகும்.

தொழில் 
திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, இக்காலம் யோகமாகவே இருக்கும். தொழில் காரகன் சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். ஷேர் மார்க்கெட், நிதிநிறுவனம், மினரல் வாட்டர்,  ட்ரான்ஸ்போர்ட், எக்ஸ்போர்ட், ஜவுளி, விவசாயம், பதிப்பகம், செய்தித்தாள், காலண்டர், நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, தனியார் பள்ளிகள், யூட்யூப், சின்னத்திரை, சினிமா தொழில்கள் லாபமடையும். வழக்கறிஞர், பத்திரம் எழுதுவோர், ஆசிரியர் முன்னேற்றமடைவர்.

பணியாளர்கள் 
வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் திறமைக்குரிய மரியாதையும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வழக்கு விசாரணைகள் முடிவிற்குவரும். கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பயம் போகும்.

பெண்கள்
இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். நோய் நொடி என்ற நிலை மாறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும் பகைவர்களும் உங்களைத் தேடிவரக்கூடிய நிலை உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். கணவரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பிள்ளைகளும் உங்கள் சொல்படி நடப்பார்கள் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் நட்பு என்ற பெயருடன் உங்களை நெருங்குபவர்களால் அவப்பெயருக்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது உங்கள் கவுரவத்திற்கு நன்மையளிக்கும்.

கல்வி 
படிப்பில் கவனம் அதிகரிக்கும்.  ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதால் பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை 
சப்தம சனியால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் ஆறாமிட ராகுவால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். மருத்துவச்செலவு குறையும்.

குடும்பம்
நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், நெருக்கடிகள் முடிவிற்கு வரும். பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழக்கூடிய நிலை உண்டாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும்.

பரிகாரம் :கோமதி அம்மனை வழிபட்டுவர நன்மை உண்டாகும்.


சித்திரை: சவாலே சமாளி


தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய்க்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடங்களுக்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவராகிறார். சித்திரை 1,2ம் பாதத்தினருக்கு சனி சப்தம ஸ்தானத்தில் கண்டக சனியாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியாகவும் சஞ்சரிக்க உள்ளார். இதனால் 1,2ம் பாதத்தினருக்கு, குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடிகளையும், வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலையினையும், கூடா நட்புகளால் கேடுகளையும் உண்டாக்குவார். உடல்நிலையில் பாதிப்பையும் மனதில் குழப்பத்தையும் அதிகரிப்பார். 3,4ம் பாதத்தினருக்கு எடுத்த காரியம் யாவிலும் வெற்றியினை வழங்குவார் என்றாலும், இக்காலத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகள், சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்தநிலை. திசா புத்திக்கேற்ப இப்பலன்களில் ஒவ்வொருவருக்கும் மாற்றம் ஏற்படும். 

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்கு செல்வதால், இக்காலங்களில் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியாலும், அவருடைய பார்வைகளாலும் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மனதில் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். 3,4ம் பாதத்தினருக்கு விரய செலவுகள் குறையும். உடல்நிலை சீராகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர் பலம் கூடும். புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
சித்திரை 1,2ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை ஆறாமிட ராகுவால் செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நவ. 13, 2026 முதல் லாப கேதுவால் பொருளாதார நிலை உயரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, நவ. 13, 2026 வரை லாப கேதுவால் வரவேண்டிய பணம் வரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய பொருட்கள் சேரும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக 1,2ம் பாதத்தினருக்கு
கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உயர்கல்வி கனவு நனவாகும். குழந்தை பாக்யம் உண்டாகும். கடகம் மற்றும் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் கண்டக சனியின் பாதிப்பு விலகும். 3,4ம் பாதத்தினருக்கு மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். திருமணம், குழந்தை, சொந்தவீடு என்ற கனவு நனவாகும். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் சனி பகவானின் பாதிப்பு விலகும். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வரவேண்டிய பணம் வரும்.

பொதுப்பலன் போராட்டம் நெருக்கடி என்றிருந்த நிலைகளில் மாற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். சொந்த வீடு, வாகனம் என்று சேரும். தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீண் செலவுகள் கட்டுப்படும். உடல்நிலை சீராகும். உயர் கல்வி, திருமணம், வேலை என்ற கனவுகள் நனவாகும். பணம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு என்று அனைத்தும் கிடைக்கும்.

தொழில் 
தைரியமாக செயல்படக்கூடிய உங்களுக்கு தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். போட்டியாளரால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்த இடம் தெரியாமல் போகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மெடிக்கல், உணவகம், விவசாயம், ரசாயன பொருட்கள், குடிநீர், பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஜவுளி, காலண்டர், நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, பள்ளிகள், யூட்யூப், சின்னத்திரை, சினிமா தொழில்கள் முன்னேற்றம் அடையும். காவல்துறை, பாதுகாப்புப்படை, மருத்துவத்துறையினர் லாபம் அடைவர்.

பணியாளர்கள் 
எதிர்பார்த்த இடமாற்றமும் நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் கிடைக்கும். தினப்பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.

பெண்கள்
தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படக்கூடிய உங்களுக்கு, உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். பொன் பொருள் சேரும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். கணவர், பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

கல்வி 
குருப் பார்வைகள் சாதகமாக இருப்பதால்
படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை 
மருந்து மாத்திரை மருத்துவமனை என்ற நிலை மாறும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் சிகிச்சையால் குணமாகும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்துடன் நடைபோடக்கூடிய நிலை உண்டாகும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம், ஆடை ஆபரணம் என்று சேரும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடு விலகும்.
பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

பரிகாரம் :மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட நன்மை உண்டாகும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (6.3.2026 முதல் 24.4.2028 வரை) »
temple news
அசுவினி: செலவு அதிகரிக்கும்உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியும், லாபாதிபதியுமான சனி பகவான் இதுவரை லாப ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோக காலம்ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பு உயர்வுதரும்தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: மாற்றம் காத்திருக்குஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: விழிப்புணர்வு அவசியம்ஞான மோட்சக்காரகன் கேது, ஆத்மக்காரகன் சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar