செந்துறை; செந்துறை அருகே கருத்தநாயக்கன்பட்டி முருகன், முத்துலிங்கேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி முன்னதாக அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் மஹாகணபதி வழிபாடு, புனித மண் எடுத்தல், கோ பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காசி, ராமேஸ்வரம்,கங்கை, காவேரி, கரந்தமலை அழகர்மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.