Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முடுவார்பட்டியில் சொர்ண வாராஹி ... பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோலைமலை கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

பதிவு செய்த நாள்

09 மார்
2026
01:03

அழகர்கோவில்: அழகர்மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில், விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதையொட்டி யாகசாலை மண்டபம் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது.


இக்கோயிலில் 2014ல் கும்பாபிஷேகம் நடந்தது.12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடத்த முடிவு செய்து, கடந்தாண்டு நவம்பரில் பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கின.


பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை மண்டபம் அமைக்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுசஷ்டி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி உற்ஸவ மூர்த்திக்கு முன், முகூர்த்தக்கால் மரம் வைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தன.


மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க பரிவாரங்களுடன் முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மூலவர் சன்னதியை வலம் வந்து, ராஜகோபுரம் வழியாக யாக சாலை மண்டபம் அமையவுள்ள இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. நவதானியம், பால், மலர்கள் துாவி, அரோகரா கோஷத்துடன் முகூர்த்தக்கால் நட்டு, தீபாராதனை காண்பித்தனர். கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், கண்காணிப்பாளர் பாலமுருகன்உட்பட பலர் பங்கேற்றனர்.


கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘விரைவில் திருப்பணிகள் முடிந்து யாகசாலை பூஜைகள் நடத்தி, கும்பாபிஷேகம் நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’’ என்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar