தேவகோட்டை: தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயிலில் கூடாரவல்லிபூஜை நடந்தது. ரங்கநாதரை திருமணம் செய்யவேண்டி மார்கழி மாதம் 27 நாட்கள் ஆண்டாள் திருப்பாவை பாடி பெருமாளை திருமணம் செய்தார். இந்த வைபவம் கூடாரவல்லி என்று அழைக்கப்படுகிறது. 27ம் நாள் கூடாரவல்லியை முன்னிட்டு தேவகோட்டை ரங்கநாதபெருமாள் கோயிலில் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆண்டாள் பாடியது போல் திருப்பாவை பாடல்கள் பாடினால் திருமணம் நடக்கும் என்ற ஐதீகத்தின் படி திருமணம் நடக்க வேண்டி ஏராளமான பெண்கள் கழுத்தில் மாலை அணிந்து பாடல்கள் பாடி வழிபட்டனர்.