Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ... திருப்பதி தரிசனம்; ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இனி அனுமதி திருப்பதி தரிசனம்; ரூ.300 சிறப்பு தரிசன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உயர்ந்த ஆன்மாக்களை பெருமான் ஆட்கொள்வார்
எழுத்தின் அளவு:
உயர்ந்த ஆன்மாக்களை பெருமான் ஆட்கொள்வார்

பதிவு செய்த நாள்

11 மார்
2026
12:03

திருப்பூர்: ‘உலக உயிர்கள் மீது அன்பு செலுத்தும் உயர்ந்த ஆன்மாக்களை, பெருமான் தன்பால் ஈர்த்து ஆட்கொள்வார்’ என, பயிற்சி வகுப்பில், சைவ சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசினார்.


கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் தொடர் பயிற்சி வகுப்பு, திருப்பூர்ஹார்வே குமாரசாமி மண்டப வளாகத்தில், திருவருள் அரங்கில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை நடைபெற்று வருகிறது. நேற்றைய பயிற்சி வகுப்பில் கோவையை சேர்ந்த சைவ சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசியதாவது: சொந்த பந்தங்களெல்லாம் ஒரு காலத்தில் நம்மை விட்டு விலகிப் போய்விடும். நாம் கூட ஒருகாலத்தில் இந்த உலகிலிருந்து விலகிப்போய்விடுவோம். ஆனால், என்றைக்கும் நம் கூடவே, உயிருக்கு உயிராய் இருப்பவர் இறைவன் ஒருவனே. ஆகவேதான் மாணிக்கவாசகர், ‘உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்’ என்று பாடுகிறார். பெருமான் இன்பம், துன்பம் இல்லாதவர். அவரை நாம் அன்பு கொண்டு வழிபடவேண்டும். அன்பு கொண்டு வழிபடுபவர்கள் மீது, இறைவன் அருள் மழை பொழிகிறார். அதைத்தான் அன்பர்க்கு அருளும் பெருமான் என்கின்றனர். சிவபெருமான் மீதும், உலகிலுள்ள பிற உயிர்கள், மக்கள் மீதும் அன்பு கொண்டு வழிபாடு செய்கிற உயர்ந்த ஆன்மாக்களை, பெருமான், தன்பால் ஈர்த்து, ஆட்கொள்வார். நமது அன்புக்கு பரிசாக இறைவன் அருள் செய்கிறார். ஆகவே, பெருமானை அன்போடு வழிபட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar