பதிவு செய்த நாள்
12
ஜன
2013
10:01
ராசிபுரம்: ராசிபுரம் வீர ஆஞ்சநேயர் மற்றும் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது.ராசிபுரத்தில், வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில், அனுமன் ஜெயந்தியை விழா, 10ம் தேதி துவங்கியது. அதையொட்டி, பல்வேறு ஹோம பூஜை நடந்தது. பின், நேற்று ஸ்வாமிக்கு, அதிகாலை முதல் பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.அதையடுத்து, ஸ்வாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராசிபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ராசிபுரம், கச்சேரி தெருவில் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா, 9ம் தேதி துவங்கியது. நேற்று அதிகாலை முதல் பல்வேறு ஹோமம் நடந்தது. அதையடுத்து. காலை. 6 மணிக்கு. மூலவர், உற்சவர் நவமாருதி, ராமர்பாதம் உள்ளிட்டவைகளுக்கு விசேஷ திருமஞ்சனம் அலங்காரம் நடைபெற்றது.அதையடுத்து. மகா தீபராரதனை நடந்தது. பின், ஸ்வாமி, தங்கக்கவச அலங்காரத்தில். பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, மாலை ஸ்வாமி திருவீதி உலா நடந்தது.