மண்டேஸ்வரி கோவில் திருவிழா; பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2026 11:03
கூடலூர்: கூடலூர், ஓவேலி சிபோர்த் ஸ்ரீ தொட்டம்மன் மற்றும் ஸ்ரீ மண்டேஸ்வரி கோவில் தேர் திருவிழா, 6ம் தேதி காலை 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 13ம் தேதி காலை 6:30 மணிக்கு தேவர் குட்டன்மார்கள் பூஜையும், தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம், காலை 10:00 மணிக்கு மாவிளக்கு பூஜை ஊர்வலம் நடந்தது. இரவு 11:00 மணிக்கு குண்டத்துக்கு தீ மூட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, காலை 7:30 மணிக்கு பக்தர்கள் குண்டம் தீ மிதித்து நேர்த்தி கடனை நிறைவேற்றினார். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. காலை 10:00 மணிக்கு சுவாமி வீதி உலா ஊர்வலம் நடந்தது. இன்று, சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.