உங்கள் ராசிக்கு இந்த மாதம் நற்பலன் தரும் கிரகங்களாக குருவும், சுக்கிரனும் செயல்படுகின்றனர். மணமில்லாத மஞ்சள் போல் தான் இந்த மாதம் கழியும். பூர்வசொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு வரவுக்கேற்ப கூடுதல் செலவு ஏற்படும். சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரவேண்டாம். புத்திரரின் தேவைகளை நிறைவேற்றி அன்பு, பாசம் அதிகம் பெறுவீர்கள். எதிரியால் வருகிற தொல்லையை தகுந்த மாற்று உபாயத்தினால் சரிசெய்வீர்கள். உடல்நலம் சுமார். தம்பதியர் குடும்பநலன் கருதி கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வர். குடும்பத்தில் சந்தோஷமும் மனநிறைவும் இருக்கும். நண்பர்களின் சிரம சூழ்நிலையை சரிசெய்ய இயன்ற அளவு உதவுவீர்கள். ஆன்மிக சுற்றுலா திட்டமிட்டபடி நிறைவேறும். தொழிலதிபர்கள் அரசின் சட்டதிட்டங்களைப் பின்பற்றினால் தான் சிரமங்களைத் தவிர்க்க முடியும். உற்பத்தியை அதிகரிக்க தேவையான அனுகூல சூழ்நிலை இருக்கும். வியாபாரிகள் போட்டியை சமாளித்து, விற்பனையில் சுமாரான அளவை எட்டுவர். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் ஏற்று செயல்பட வேண்டியிருக்கும். எவ்வளவு தான் உழைத்தாலும், பணிகள் அதிகமாகி பிரச்னையைக் கூடுதலாக்கும். குடும்பப் பெண்கள் ஆடம்பரச் செலவு செய்ய ஆர்வம் கொள்வர். இதைத் தவிர்த்தால் தான், கடன் வாங்குவதிலிருந்து தப்பலாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூல தனத்துடன், அதிக உழைப்பினால் சராசரி விற்பனை, பணவரவு காண்பர். அரசியல்வாதிகள் சமரச பேச்சுக்களில் இருதரப்பு நியாயம் உணர்ந்து செயல் படுவது நல்லது. விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் கொள்வது நல்லது.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் நற்பலன் அதிகரிக்கும். உஷார் நாள்: 28.1.13 மாலை 5.55- 30.1.13 இரவு 12.45. வெற்றி நாள்: பிப்ரவரி 11, 12 நிறம்: மஞ்சள், வெள்ளை எண்: 2, 3
மேலும்
ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »