இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ விரும்பும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நற் பலன் தரும் கிரகங்களாக கேது, சுக்கிரன் செயல்படுகின்றனர். எந்த செயலையும் முன்யோசனை, திறமை யுடன் நிறைவேற்றுவது நல்லது. சர்க்கரைப் பொங்கலுக்கு சாம்பார் தொட்டுக்கொண்ட மாதிரியான உணர்வை இம்மாதம் தரும். புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் செயல் படுகிற கிரகநிலை உள்ளது. இதமான வகையில் அறிவுரை சொல்வதால் குடும்பத்தில் நல்ல சூழ்நிலை உருவாகும். தவிர்க்க இயலாத செலவுகளுக்காக சொத்தின் பேரில் கொஞ்சம் கடன் பெறுவீர்கள். உடல்நிலை ”மாராக இருக்கும். எதிர்பாராமல் வருகிற சிறு பிரச்னைகளை சமாளிக்க நல்லவர்களின் உதவி கிடைக்கும். தம்பதியர் குடும்பச் சூழ்நிலைகளை உணர்ந்து செலவுகளைக் குறைத்துக் கொள்வர். தொழிலதிபர்கள் உற்பத்தி இலக்கை அடைவதில் சில தடைகளை எதிர்கொள்வர். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். வியாபாரிகள் மூலதன தேவைக்கும் நிலுவைக்கடன் சரிசெய்யவும் தகுந்த முயற்சி செய்வர். ஓரளவு விற்பனை, அளவான பணவரவு உண்டு. பணியாளர்கள் உடல்நலத்தை பேணுவதால் மட்டுமே பணியைச் சிறப்பாக செய்ய முடியும். குடும்பப் பெண்கள் சிக்கனச் செலவுகளை மேற்கொள்வதால் மட்டுமே தேவையற்ற சிரமம் வராமல் தவிர்க்கலாம். தாய்வழியில் சிலருக்கு உதவி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பொறுப்புணர் வுடன் செயல்படுவதால் மட்டுமே வேலைகள் திட்டமிட்டபடி நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான உற்பத்தி, விற்பனை என்கிற நிலையை பெறுவர். ஓரளவு லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தெய்வமே துணை என்ற நிலை உள்ளது. விவசாயிகள் பயிர் வளர்ப்பில் கவனம் கொள்வதால் மட்டுமே மகசூல் அளவு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் மனதில் தைரியம் அதிகரிக்கும். உஷார் நாள்: 30.1.13 இரவு 12.46- 2.2.13 அதிகாலை 5.23. வெற்றி நாள்: ஜனவரி 19, 20 நிறம்: சிவப்பு, வெள்ளை எண்: 6, 9
மேலும்
கார்த்திகை ராசி பலன் (17.11.2025 முதல் 15.12.2025 வரை) »