கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 25ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த பிப்., 22ம் தேதி, தல விநாயகர் சன்னதியில் சங்கல்பம் செய்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன், பிடாரி அம்மன் சன்னதிகளில் யாகசாலை பூஜை நடைபெறும் இடத் தில் விநாயகர் வழிபாடு, கலச பூஜை, பந்தக்காலுக்கு பூஜை செய்து பந்தக்கால் ந டப்பட்டது. நேற்று காலை கோவிலில் தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் சிறப்புடன் நடக்க உத்தரவு அனுமதி கேட்டு சிறப்பு பூஜை, மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீஷோடஸ மகா கணபதி ஹோமம், கலச அபிஷேக தீபாராதனை நடந்தது. கணபதி ஹோமத்தில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய் தனர்.