Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் சிவலோகநாதர் கோவிலில் ... டில்லி துர்கா கோவிலில் முதல்வர் ரேகா குப்தா வழிபாடு டில்லி துர்கா கோவிலில் முதல்வர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை வனப்பகுதியில் வீரராசேந்திரன் கல்வெட்டு; ஆய்வில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
உடுமலை வனப்பகுதியில் வீரராசேந்திரன் கல்வெட்டு; ஆய்வில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

20 மார்
2026
11:03

உடுமலை: உடுமலை அருகேயுள்ள கல்லாபுரத்தில், வீரராசேந்திரன் காலத்திய கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை, கல்லாபுரம் கோபாலபுரம் அருகேயுள்ள வனப்பகுதியில், கி.பி., 12ம் நூற்றாண்டைச்சேர்ந்த, கொங்கு நாட்டை ஆட்சி செய்த வீரராசேந்திரன் காலத்தை சேர்ந்த கல்வெட்டு ஒன்றை, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவணப்படுத்தியுள்ளனர்.


அக்கல்வெட்டில், ‘‘ஸ்வஸ்ஸ்ரீ வீரராசேந்திர தெவற்கு யாண்டு மங்கலத்து மலையாட்டி சாத்தன் ஆப’’ என எழுதப்பட்டுள்ளது. இதன் முழுமையான கல்வெட்டு கிடைக்கவில்லை. இது குறித்து, மத்திய தொல்லியல் துறை (ஓய்வு) தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது: தற்போது கிடைத்துள்ள கல்வெட்டில், வீரராசேந்திரன் என்றும், தேவற்கு என்றும் மங்கலத்து மலையாட்டி என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, தென்கொங்கு நாட்டுப்பகுதியை சேர, சோழ, பாண்டியர் ஆட்சி செய்தமைக்கான பல்வேறு கல்வெட்டுகள் ஆங்காங்கே கிடைத்துள்ளதும், தற்போது கிடைத்துள்ள கல்வெட்டு, அதனை உறுதி செய்யும் வகையிலும் உள்ளது. ஏற்கனவே, உடுக்கம்பாளையத்தில் பாண்டியர் பெயர் பொறித்த கல்வெட்டும், கண்ணாடிப்புத்துாரின், பழைய பெயர் வீரபாண்டி சதுர்வேதி மங்கலம் என்ற பழங்காலப் பெயரும், இப்பகுதியை பாண்டியர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகளாக உள்ளன.


அதே போல், பதிற்றுப்பத்தில், சேரன் செங்குட்டுவனின் கொடி வழி உறவுகள் இங்கு வந்து அயிரை மலையில் வழிபட்டமைக்கான இலக்கியச்சான்றுகளும் உள்ளன. மேலும், விக்கிரமசோழன் ஆட்சி செய்தமைக்கான சான்றாக கல்லாபுரம் உள்ளதும், அதன் பண்டைய கால பெயர் விக்கிரம சோழ நல்லுார் என்பதாகும். கி.பி., 1,206 முதல் 1,250 வரைக்கும் வீரராசேந்திரன் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள், கடத்துார் மருதீசர் கோவில் கல்வெட்டில் உள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது வீரராசேந்திரன் காலத்திய கல்வெட்டு கிடைத்துள்ளது. இவ்வாறு, தெரிவித்தார். இந்த ஆய்வில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தைச்சேர்ந்த, அருள் செல்வன், சிவக்குமார், வீரய்யன், பல்லடம் அரசு கல்லுாரி, தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜெய்சிங் ஆகியோரும் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar