கடலுார் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2026 11:03
கடலுார்: கடலுார் வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திரவிழா, நேற்று காலை கொடியேற்றத் துடன் துவங்கியது.
கடலுார் வண்டிப்பாளையம் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று காலை பங்குனி உத்திர விழா கொடியேற்றம் முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 8.30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றி பங்குனி உத்திர விழா துவங்கியது. பின் சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 28ம் தேதி திருக்கல்யாணம், 31ம் தேதி தேர் திருவிழா, ஏப் 1ம் தேதி பங்குனி உத்திர 108 சங்கு பூஜை, மகாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.