திருச்சுழி திருமேனிநாதர் கோயில் பங்குனி உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2026 11:03
திருச்சுழி: திருச்சுழி திருமேனிநாதர் கோயில் பங்குனி உற்ஸவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கோயிலில் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு, கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் பூஜை செய்த பின் கொடி ஏற்றப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் திருமேனிநாதர், துணைமாலை அம்மன் அன்னம், ரிஷபம், மயில் அலங்காரங்களில் பக்தர் களுக்கு அருள் பாலிப்பர். மார்ச் 30ல், திருக்கல்யாணமும் மறுநாள் தேரோட்டமும் நடக் கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.