கோவை ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2026 11:03
கோவை: கோவை ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீசத்ய சாயி 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதை முன்னிட்டு நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று நடந்தது.
இதில் விசில் இசைக்கலைஞர் ஐதராபாத் சிவபிரசாத் குமாரவேலுவின் விசில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், ராமகிருஷ்ணன் மிருதங்கம், குருவாயூரப்பன் வயலின், கோவை சுரேஷ் கடம் வாசித்தனர்.கோவை ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவன நிர்வாகிகள் கூறுகையில், ‘விசில் என்பது ஒரு கலை. அதில் கர்நாடக இசையை வாசிப்பது கடினமான ஒன்று. சிவபிரசாத் குமாரவேலு உலகம் முழுவதும் சென்று விசில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் ஸ்ரீ சத்யசாயின் தீவிர பக்தர். பாபாவின் முன் விசில் இசையை இசைத்து அவரின் ஆசியை பெற்றவர். அவரது இசை நிகழ்ச்சி, நாளை (இன்று) ரேஸ்கோர்சில் உள்ள ஸ்ரீ சத்ய சாயி மந்திரிலும், நாளை ராம்நகர் கோதண்டராமர் கோயிலிலும் நடக்கிறது’ என்றனர். நிகழ்ச்சியில் 100க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.