Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவிலில் திருக்கல்யாண ... திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் அன்ன வாகனத்தில் சோமாஸ்கந்தர் உலா திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 மார்
2026
12:03

தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் அகஸ்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு கௌதம மகரிஷியால் பூசிக்கப்பட்ட மகா கணபதி அருளாட்சி புரிந்து வரும் அழகிய காவிரி வடகரை கிராமமான கணபதி அக்ரஹாரத்தில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட ஆனந்தவல்லி அம்பிகா சமேத பிரம்ம நாகரேச்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சென்னை பார்சன் குரூப்ஸ் இயக்குனர் ஜி. எஸ். ஆதிசேஷன் அவர்களின் பெரும் பங்களிப்புடன் ராஜகோபுரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருப்பணிகள் முழுமையாக நிறைவு பெற்றது. கடந்த 19ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 22 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 


இன்று காலை 6 ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9:15 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. வேத மந்திரங்கள் ஓத, சுக்லபக்ஷ சப்தமி திதி மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் கூடிய காலை 9:17 க்கு மேல் 11 மணிக்குள் ரிஷப லக்னத்தில் கோவில் அர்ச்சகர் கார்த்திகேயன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனித நீரை சுவாமி, அம்பாள், ராஜகோபுரம் கலசங்களில் ஏககாலத்தில் விட்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் வழங்கப்பட்டது. பாபநாசம் டிஎஸ்பி. முருகவேல் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை மண்டல அபிஷேக ஆரம்பம், திருக்கல்யாணம் மற்றும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஸ்ரீ மகா கணபதி பிராமண சமூக கோவில் நிர்வாக டிரஸ்ட், அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள், கிராமவாசிகள் இணைந்து செய்திருந்தனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar