கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கண்ணாடி அறையில் பள்ளியறை உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு பள்ளியறை உற்சவம் நடந்தது. தில்லை கோவிந்தராஜ பெருமாள், தாயார் உபயநாச்சியார் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்விக்கப்பட்டது. உட்பிரகாரம் வலவரப்பட்டு கண்ணாடி அறையில் எழுந்தருள செய்யப்பட்டனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. வெள்ளி சொம்பில் பால் மற்றும் இனிப்பு, பழ வகைகளை வைத்து ஆராதிக்கப்பட்டது. பள்ளியறை சாத்தப்பட்டது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சுப்ரபாதசேவை, விஸ்வரூப தரிசனம் செய்து பள்ளியறை திறக்கப்பட்டது. ஆராதனை, சாற்றுமுறை, சேவைகளுக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளாக பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.