பங்குனி பவுர்ணமி: திருவண்ணாமலையில் இன்று காலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2026 02:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சிவ தலங்களில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக திருவண்ணாமலையில், மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர். பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தர்ம தரிசனம், கட்டண தரிசனம் மூலமாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோயிலில் வழிபட்டு, கிரிவலம் சென்றனர். பங்குனி பவுர்ணமி நேற்று காலை 7.38 மணிக்கு தொடங்கி இன்று காலை 7.57 வரை இருந்தது. இதனால் இன்று காலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரி