மாஸானாம் மார்க்கசீர்÷ஷா அஹம் என்று கீதையில் கண்ணன் மார்கழியின் பெருமையைப் போற்றுகிறார். ஆண்டாள் பாடிய திருப்பாவைப் பாசுரங்களும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்களும் நாள்தோறும் பாடி கோயிலை வலம் வருவது இந்த மாதத்தில் தான். சிவனுக்குரிய திருவாதிரை நன்னாளும், பெருமாளுக்குரிய வைகுண்டஏகாதசியும்கொண்டாடப்படுகின்றன. ஐயப்ப, முருக பக்தர்கள் மாலையிட்டு எப்போதும் பக்திமயமாக இருப்பதையும் எங்கும் காணமுடியும். ஆன்மிக மணம் எங்கும் கமழும் மாதமாக இருப்பதால் மாதங்களில் சிறந்ததாக விளங்குகிறது.