புருஷாமிருக வாகனத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் வீதி உலா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2026 04:04
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர பெருவிழாவின் 12வது நாளான இன்று ஏகாம்பராதர் புருஷாமிருக வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, கடந்த 22ம் தேதி காலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலையிலும், இரவும், உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில், வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதன்படி, ஆறாம் நாள் உத்சவமான 63 நாயன்மார்கள் உத்சவம் விமரிசையாக நடந்தது. ஏழாம் நாள், தேரோட்டம், 10ம் நாள் உத்சவமான பங்குனி உத்திர திருக்கல்யாணம் வரும் 31ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து 12வது நாளான இன்று ஏகாம்பராதர் புருஷாமிருக வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.