சிங்கம்புணரி பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2026 05:04
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா நடந்தது. இக்கோயிலின் பங்குனித்திருவிழா மார்ச். 26 ல் பூச்சொரிதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு ஏராளமானோர் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இரவு பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.