பதிவு செய்த நாள்
16
ஜன
2013
11:01
பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி கோவிலில், மலைக்கோவிலுக்கு செல்ல, 365 படிகள் கட்டி, நேற்று முன்தினம் பக்தர்களுக்கு திறந்து விடப்பட்டது. பள்ளிப்பட்டு அடுத்த, பொதட்டூர்பேட்டையில் உள்ளது ஆறுமுக சுவாமி மலைக்கோவில். இக்கோவிலில் மலைக்கு செல்ல பாதை மட்டுமே இருந்தது. படிகள் இல்லை. இதையடுத்து, 30 ஆண்டுகளுக்கு முன், 365 படிகள் கட்டும் பணியை, கிருபானந்த வாரியார் துவக்கி வைத்தார். தொடர்ந்து படிகள் கட்டும் பணி நடந்து வந்தது. தற்போது, மலை மீதுள்ள உச்சி பிள்ளையார் கோவில் வரை, 365 படிகளும் கட்டும் பணி முடிவடைந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் பொங்கல் தினத்தன்று, 365 படிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜை முடிந்ததும், பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.