காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் தர்பாரண்யேஸ்வர் கோவிலில் பொங்கலையொட்டி பிரணாம்பிகை புறப்பாடு நடந்தது.காரைக்கால் அடுத்த திருநள்ளார் தர்பாரண்யேஸ்வார் கோவிலில் பொங்கலையொட்டி பிரணாம் பிகை அம்பாள் கோவிலிலிருந்து சரஸ்வதி தீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. வருடத்தில் ஒரு நாள் மட்டுமே பிரணாம்பிகை கோவிலை விட்டு வெளியில் எழுந்தருள்வார். கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.பாரதியார் சாலையில் உள்ள நித்தியகல்யாணப்பெருமாள் கோவிலில் பொங்கலையொட்டி கனுப் பொடி கலவை சாதம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாயகித்தாயார் கோவில் உள்பிரகாரம் உலா வந்தார். சந்திரபுஷ்கரணிக்கு சடாரி கொண்டு செல்லப்பட்டு அங்கு கனுப்பொடி வைக்கும் நிகழ்ச்சியாக தீர்த்தவாரி நடந்தது. மூலவர் ஸ்ரீ ரங்கநாதர் உற்சவர் நித்தியக் கல்யாணப்பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது.