பதிவு செய்த நாள்
16
ஜன
2013
11:01
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகபெருமாள் கோவிலில், மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இக்கோயில் மாட்டு தொழுவத்தில், பல்வேறு கிராமங்களை சேர்ந்த கோவில் காளைகள் கட்டப்பட்டிருக்கும். அதற்கு பக்தர்கள் வேட்டி,மாலை அணிவித்து நேர்த்தி செலுத்தினர். பிற்பகல் காளைகளை, கயிறுகட்டி அழைத்து சென்றனர். இதற்காக, சிங்கம்புணரி மட்டுமின்றி மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிலர் தங்களது காளைகளை கொண்டுவந்தனர். இக்கட்டுமாடுகளுக்கு சிறப்பு பூஜை, பத்தினி சுற்றி வந்த பின், காளைகள் அவிழ்த்துவிடப்படும். இவற்றை அடக்க சென்ற மேலூர் வீரணன், 29,குமரிபட்டி சதீஸ்குமார், 19, திருக்குளம்பூர் ரகு,25, மூவன் சிவல்பட்டி வீரமணி,22 உட்பட 10 பேர் காயமுற்றனர். கிருங்காக்கோட்டை, அ.காளாப்பூர், முறையூர், அய்யாபட்டி.எஸ்.வி.,மங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பொங்கல் வைத்து காளைகளை வழிபட்டனர்.