தேய்பிறை சஷ்டி: பக்தியுடன் வேண்டுங்க.. முன் வந்து காப்பார் முருகப்பெருமான்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2026 10:04
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும்.
திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு உகந்த சஷ்டி திதியாகும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். மன்மதன் போல அழகுடன் திகழ்வர் என கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும். சஷ்டியில் முருகனை வழிபட்டால் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வீட்டில் விளக்கேற்றி வழிபடுவோம்.. ஆறு படையப்பன் அருளை பெறுவோம்!