எல்லை பிடாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2026 04:04
மானாமதுரை: மானாமதுரையின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய விழாவான பொங்கல் விழா வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி- சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவதற்கு முன்பாக மானாமதுரையின் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடியேற்ற விழாவிற்காக மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து உற்சவர் பிடாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோயிலுக்கு வந்தடைந்த பின்பு அர்ச்சகர்கள் ஹோமங்கள் வளர்த்து பூஜைகளை செய்த பின்னர் கோயிலின் முன்பாக உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள்,தீபாராதனை நடைபெற்றது.10 நாட்கள் நடைபெறும் விழாவின் போது போது உற்சவர் எல்லைப்பிடாரி அம்மன் சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சர்வ அலங்காரங்களுடன் வீதியுலா நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை விழா வருகிற 14ம் தேதி செவ்வாய் கிழமை தமிழ் புத்தாண்டு அன்று நடைபெற உள்ளது.