உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், தங்கம் போல், மின்னும் கொடிமரம் கம்பீரமாக அமைந்துள்ளது. தேர்த்திருவிழாவின் போது, இக்கொடி மரத்தில் மஞ்சள் வண்ண துணியில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் திரு உருவம், சூரியன், சந்திரன் என வடிவமைக்கப்பட்ட திருவிழா கொடி, கோவில் கொடி மரத்தில் பக்தர்களின் ‘‘ஓம் சக்தி, பராசக்தி ’’ கோஷம் முழங்க திருவிழா கொடியேற்றப்படுகிறது.
அதே போல், திருவிழாவை முன்னிட்டு, கருவறை, முன் மண்டபம் என கோவில் வளாகம் முழுவதும், மலர் தோரணங்களாலும், கோவில் கோபுரம் முதல், சுற்றுச்சுவர் வரை அனைத்து இடங்களிலும் வண்ண மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, திருவிழா காலங்களில் கோவில் வளாகம் ஜொலிக்கும் அற்புத காட்சியாக உள்ளது.