Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலையின் காவல் தெய்வம் மகா சக்தி ...
முதல் பக்கம் » துளிகள்
வாழ்வியல் தத்துவம் விளக்கும் தேர்த்திருவிழா ஊர்கூடி தேர் இழுக்கும் அற்புத விழா
எழுத்தின் அளவு:
வாழ்வியல் தத்துவம் விளக்கும் தேர்த்திருவிழா ஊர்கூடி தேர் இழுக்கும் அற்புத விழா

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
11:04

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர், எண் கோண வடிவில் அழகாக அமைந்து, வாழ்வியல் தத்துவங்கள், ஒற்றுமை விளக்கும் அம்சமாக தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவிற்காக, புதிய தேர் அமைக்கப்பட்டு, மூன்றாவது ஆண்டாக, நடப்பாண்டும் புதிய தேரில் அம்மன் எழுந்தருள உள்ளார்.

புதிய எண்கோண வடிவத்தில், உயரம், அகலம் என பிரமாண்டமான தேரில், சுவாமிகள் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர்.

இத்தேர் சிறப்பு அம்சங்களுடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும், ஐந்து நிலைகளை கொண்டதாகவும், தேரின் மொத்த உயரம், 12 அடியாகவும், இதில் தேர்ப்பலகை, 9 அடி உயரத்திலும், சுவாமிகள் எழுந்தருளும் உற்சவருக்கான சிம்மாசனம், இரண்டடி உயரத்திலும், இலுப்ப மரம் மற்றும் தேக்கு மரம் கொண்டு அமைக்கபட்டுள்ளது.

தேரின் வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், அம்மன் எழுந்தருளியுள்ள கோவில்கள் மற்றும் அம்மன் அவதார சிற்பங்கள், வரலாற்று சிற்பங்கள் மற்றும் சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், முருகன் சிற்பங்கள் என, 220 மரச்சிற்பங்களும், மனித வாழ்வியல் தத்துவம் விளக்கும் வகையில், 120 போதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.

சிம்ம கொடியுடன் கலசம் புதிய தேர் எண்கோண வடிவில் அதற்குரிய வடிவத்தில், புதிய கம்பிகள் இணைக்கப்பட்டு, பீடத்திற்கு மேல், 5 அடுக்கு மற்றும் புதிய கலசம் நிறுவப்பட்டுள்ளது.

மேலும், செம்பு தகட்டினால் அற்புத வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட, செம்பு தகட்டினால் ஆன, சிம்ம கொடி அமைக்கப்பட்டுள்ளது.

பழைய தேரை விட, புதிய தேர் உயரமாகவும், அகலமாகவும், புதிய வடிவில் பிரமாண்டமாக காணப்படுகிறது. ஏறத்தாழ, 50 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பது போல், தேர் கோபுர வடிவத்தில், கலசம் கொண்டதாகும். பக்தர்களுக்கு அருள் பாலிக்க திருத்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கும் அற்புத நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடந்து வருகிறது.

தேரின் அமைப்பு அண்டத்தையும், மனித சரீரத்தையும் குறிப்பிடுவதாகும். முதல் அடுக்கு, குண்டலனிஸ்தானம், நாபி, இருதயம், கழுத்து, மஸ்தக அந்தஸ்தானம், மத்திய ஸ்தானம், மஸ்தக ஆதி ஸ்தானம், துவாதசாந்தம் என எட்டு அண்டத்தை அடுக்குகளாக கொண்டு, உச்சியிலிருக்கும் கும்பம், சோடசாந்தம், நடுவில் இருக்கும் துாண்கள் தத்துவங்கள், இரு குதிரைகள், சூரியன், சந்திரன், பத்து சக்கரங்கள் தச வாயுக்கள் என தத்துவத்தை விளக்கும் அம்சமாக குறிப்பிடப்படுகிறது.

அதாவது பிண்டத்துவ சரீரமாகிய தேரில், தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி, மனத்தை அசைவற்று, ஒரு நிலைப்படுத்தி, குண்டலினியிலிருந்து நாபிக்கும், கண்டத்திற்கும், நாசிக்கும், கண் வழியே புருவ மத்திக்கும் ஏற்றி, லயப்பட்டு, நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தை விளக்குவதே தேரின் அமைப்பாகும் என கூறப்படுகிறது.

தேரோட்டம் போக்குவரத்தில் மாற்றம்!

 உடுமலை நகர போக்குவரத்தில், இன்று மாற்றம் செய்யப்பட்டு, மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை நகரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது. கோவில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், தேரோட்டத்தின் போது, நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று பகல், 1:00 மணியில் இருந்து இரவு, 11:00 மணி வரை போக்குவரத்து மாற்றப்படுகிறது. பழநியில் இருந்து, உடுமலை வழியாக பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், பாலப்பம்பட்டியில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, புதிய பை–பாஸ் ரோடு வழியாக பயணித்து, ராகல்பாவி பிரிவில், மீண்டும் தேசிய நெடுஞ்சாலையுடன் இணையலாம்.

அதே போல், பொள்ளாச்சியில் இருந்து, உடுமலை வழியாக பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வரும் வாகனங்கள், ராகல்பாவி பிரிவில், பை–பாஸ் ரோட்டில் பிரிய வேண்டும். அங்கிருந்து பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு சந்திப்புகளை கடந்து, மீண்டும் பழநி நெடுஞ்சாலையை எட்டி பயணிக்கலாம்.

திருமூர்த்திமலை, அமராவதி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நகருக்கு வரும் வாகனங்கள், எலையமுத்துார் பிரிவு, அரசு கலைக்கல்லுாரி, ராமசாமி நகர், ரயில்வே ஸ்டேஷன் வழியாக உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு செல்லலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். பல நுாற்றாண்டுகள் பழமையான, ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கம்பம் போடுதல் நிகழ்ச்சிக்கு பின், வேப்பிலை, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, பக்தர்கள் உப்பு கொண்டு வந்து, பலி பீடத்திற்கு ... மேலும்
 
temple news
உடுமலை: மழை பெருக்கி, மண் செழிக்க வைக்கும் மாரியம்மனுக்கு, நெல், எள், பயறு வகைகள் என ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar