Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புவனத்தில் சித்திரை திருவிழா ... ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லுார்து அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
லுார்து அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

12 ஏப்
2026
09:04

வில்லியனுார்: வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலயத்தின் 149வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

வில்லியனுார் துாய லுார்து அன்னைஆலயத்தின் 149வது ஆண்டு பெருவிழா நேற்று துவங்கியது. காலை 5:30 மணிக்கு திருத்தல வளாகத்தில் உள்ள அருள்நிறை ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடந்தது.

பின், கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியேற்றி, விழாவை துவக்கி வைத்தார்.

ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி, இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடக்கிறது. வரும் ஏப்., 19ம் தேதி ஆண்டு பெருவிழா நடக்கிறது.

அன்று காலை 7:30 மணிக்கு புதுச்சேரி – கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 6:00 மணியளவில் வேலுார் மறைமாவட்ட ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலி, இரவு 7:30 மணிக்கு மேல் வைரகிரீடம் சூட்டப்பட்டு மாதா ஆடம்பர தேர் பவனி நடக்கிறது.

ஏப்., 20ம் தேதி காலை 6:30 மணி திருப்பலிக்கு பின், கொடியிறக்கம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை அருட்தந்தையர் ஆல்பர்ட், ஆல்வின் அன்பரசு, தோமினிக் சாவியோ, அலெக்சிஸ், பங்கு பேரவை இளைஞர்கள், பக்த சபையினர் மற்றும் வில்லியனுார் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar