Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ... சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உத்சவம் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் தவன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்மேடு காசி விஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செம்மேடு காசி விஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2026
11:04

 பண்ருட்டி: காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமத்தில், 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒரே வளாகத்தில் சிவபெருமான், வரதராஜபெருமாள் கோவில் இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் தரிசனம் செய்தால் காசியில் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவில்கள்திருப்பணிகள் முடிந்து கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.

 காசி விஸ்வநாதசுவாமி கோவிலில் கடந்த 9ம் தேதி  அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜைகள் துவங்கியது. 10ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை, 11ம் தேதி காலை 2ம் கால பூஜை, மாலை 6:00 மணிக்கு 3 ம்கால பூஜை , நேற்று காலை 6:00 மணிக்கு 4ம் கால பூஜையும் நடந்தது.  வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த  10ம் தேதி பூஜைகள் துவங்கி நடந்து வந்தது.

நேற்று காலை 4ம் கால யாக வேள்வி பூர்ணாகுதி முடிந்து, காலை 8:45 மணிக்கு காசிவிஸ்வநாதர், அம்பாள், ராஜகோபுரம், வரதராஜபெருமாள் கோபுரத்திற்கான கடம்புறப்பாடாகி 9:15 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலாய சுவாமிகள் தலைமையில் கும்பாபிேஷகம் நடந்தது.

  சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன், அறநிலைய கூடுதல் கமிஷ்னர் ரவிச்சந்திரன், திருப்பணி கூடுதல் கமிஷனர்கள் ஜெயராமன், மங்கையர்கரசி, கடலுார் இணை கமிஷ்னர் ஜோதி, உதவி கமிஷனர் சிவக்குமார்,  பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவில் நிர்வாக டிரஸ்டி கோதண்டராமர், செயலாளர்  நரசிம்மன்,  டிரஸ்டிகள் நடராஜன், பழனியப்பன், செல்வம், அறநிலைய ஆய்வாளர் வசந்தம், செயல் அலுவலர் சரவணரூபன், முன்னாள் செயல் அலுவலர் நாகராஜன், வக்கீல் பார்த்தசாரதி, முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன்  உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் விழா குழுவினர் செய்திருந்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar