பராபவ புத்தாண்டு பிறப்பு: காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் பக்தர்களுக்கு ஆசி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 10:04
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் இன்று பக்தர்களுக்கு ஆசி வழங்கி சொற்பொழிவாற்றிவார்.
சுவாமி கூறியதாவது: நம்முடிய கலாசாரம் தொன்மையானது புனிதமானது. அனைவரும் ஆரோக்யமாகவும், வளமுடன் வாழ வேண்டும். இந்த உலகில் சுபிச்சம் நிலவு வேண்டும். மனிதனின் பிறப்பின் பயனாக கடவுளின் பக்தியை வளர்க்க வேண்டும். மனிதனின் இந்த அழகான பிறப்பில், நாம் செயல்படுவதற்கு முன் சிந்திக்க வேண்டும். அதற்கு நல்ல சத்சங்கம் வேண்டும். நல்லது எது கெட்டது எது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாம் நன்மையானவற்றைப் பின்பற்ற வேண்டும்; தீமையானவற்றைத் தவிர்க்க வேண்டும். இந்த வாழ்வையும், இந்தப் பிறவியையும் பயனுள்ளதாக்க, நாம் இறைவனிடம் பக்தி வளர்த்துக்கொள்ள வேண்டும். காலச்சாரம் என்பதன் அடிப்படையில் நமது தொன்மையான சாத்திரங்களில் திருக்குறள், பகவத் கீதை, ஆசாரக்கோவை மற்றும் நீதிநெறிகளைப் போதிக்கும் இன்னும் பல சாத்திரங்கள் தமிழில் உள்ளன. நீதிநூல்களாகத் திகழும் இச்சாத்திரங்கள் உள்ளன.இச்சாத்திரங்களைப் பயன்படுத்திக்கொண்டால், நமது வாழ்வில் உள்ள தீமைகள் அனைத்தையும் நம்மால் களைந்துவிட முடியும். நாங்கள் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகிறோம். இந்த புத்தாண்டு அனைவரும் மகிழ்ச்சியை தந்து, நல்ல ஆண்டாக அமையட்டும். இவ்வாறு சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.