Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ் புத்தாண்டு தரிசனம்: வடபழனி ... புத்தாண்டில் விவசாயம் செழிக்கட்டும் காமாட்சிபுரி ஆதீனம் அருளாசி! புத்தாண்டில் விவசாயம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராபவ புத்தாண்டே வருக: கோவில்களில் குவிந்த பக்தர்கள்.. ஞானகுருவான முருகனை வழிபடுவோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பராபவ புத்தாண்டே வருக: கோவில்களில் குவிந்த பக்தர்கள்.. ஞானகுருவான முருகனை வழிபடுவோம்!

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
08:04

 சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார்.


பராபவ ஆண்டு இன்று பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு, சென்னை,  புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு தரிசனம் நடைபெற்றது. பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், ஸ்ரீவிகாரி வருட புத்தாண்டை ஒட்டி, காலை, 6:30 மணி முதல் மதியம், 1:00  மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்படுகிறது.


அஷ்டலட்சுமி சன்னிதிகளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளன. நரசிம்மர், சக்கரத்தாழ்வாருக்கு பழ வகைகள், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு,  ஸ்ரீவிகாரி வருட பஞ்சாங்கம் வாசித்தல், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவு, 9:00 மணிக்கு, சயன பூஜை நடக்கிறது.கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வர், வடபழனி ஆண்டவர், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி, பாரிமுனை கற்பகாம்பாள், திருநீர்மலை ரங்கநாதர்,  குன்றத்துார் முருகன், மாங்காடு காமாட்சி அம்மன் உள்ளிட்ட கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல கோவில்களில், சிறப்பு அபிஷேக, அலங்காரம், தேர் பவனி, பஞ்சாங்கம் வாசிப்பது ஆகியவற்றுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


பராபவ புத்தாண்டே வருக :  குருபகவானே பராபவ ஆண்டின் ராஜா. ஞானகுருவான முருகனை கீழ்க்கண்ட பாடலைப் பாடி வழிபடுவோம்.  


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


படித்தால் நன்மை


தமிழ்ப் புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய விஷயம் பஞ்சாங்கம் படித்தல். பஞ்சாங்கத்திற்கு சந்தனம், குங்குமம் இடுங்கள். 

 திதி, கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் என  ஐந்து பகுதிகளைக் கொண்டது பஞ்சாங்கம். இதை பற்றி அறிவதால் பின்வரும் நன்மை கிடைக்கும். 

திதி – மகாலட்சுமியின் அருள்,

கிழமை – நீண்ட ஆயுள், 

நட்சத்திரம் – முன்வினை நீங்கும் 

யோகம் – உடல்நலம் 

கரணம் – வெற்றி

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar