தமிழ் புத்தாண்டு தரிசனம்: வடபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 08:04
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை மாநகரின் புகழ் வாய்ந்த தலமான, வேண்டியதெல்லாம் தரும் வடபழநி ஆண்டவர் கோவிலில் தமிழ் புத்தாண்டு தினமான இன்று ஏப்ரல் 14ம் தேதி அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அலங்கார வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. புத்தாண்டு என்பதால், அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வெற்றிவேல் முருகனுக்கு என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்து, புத்தாண்டு நல்வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்