எந்த சவாலையும் எதிர்கொள்ள தன்னம்பிக்கை தேவை. முதலில் நம்மை நாமே காதலிக்க வேண்டும். அதாவது ‘நான் இப்படி இருக்கேன்; அழகா இல்ல; வசதி இல்லை’ என எதிர்மறையாக சிந்திக்க கூடாது. குறை இல்லாத மனிதன் யார்? குறையைப் போல நிறையும் (திறமை) நமக்கு இருக்கிறது. அதை கண்டுபிடித்து வளர்ச்சி அடைபவரே வெற்றியாளர்.