பூவராகசுவாமி கோவில் சித்திரை விழா பந்தல் கால் நடும் நிகழ்ச்சி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 12:04
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் சித்திரை திருவிழா வருகின்ற 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து, 29ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது. இதற்காக கோவில் முன்புறம் விழாவிற்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவையொட்டி மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அர்ச்சனை அபிஷேம் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்புறம் சிறப்பு பூஜை செய்து பந்தல் கால் நடப்பட்டது. இதில் பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன், செயல் அலுவலர் கருணாகரன், கிருஷ்ணமூர்த்தி, செல்வகுமார், முத்துராமலிங்கம் மற்றும் நகர வர்த்தக நல சங்க பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.