மங்களூரு மங்களாதேவி கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 12:04
கர்நாடகா: காஞ்சி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா சுவாமிகள் கர்நாடகாவில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று காலை சங்கராச்சாரியார் சுவாமிகள் கர்நாடகா, மங்களூரு, மங்களாதேவி தேவஸ்தானத்திற்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.