Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதாள செம்பு முருகன் கோயிலில் தமிழ் ...  தமிழ் புத்தாண்டு : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா தமிழ் புத்தாண்டு : ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
11:04

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் சாகை வார்த்தலுடன் துவங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது. சித்திரை திருவிழாவையொட்டி இன்று மாலை 4 மணியளவில் சாகை வார்த்தலுடன் விழா துவங்கியது.

இவ்விழாவையொட்டி கூவாகம், கூவாகம் காலனி, தொட்டி, நத்தம், அண்ணா நகர், செவிலியங்குளம், பாரதிநகர் உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து பெண்கள் கஞ்சி கலயங்களை எடுத்து வந்து கோவிலில் வைத்து ஸ்ரீ மாரியம்மனுக்கு படையலிட்டனர். அப்போது சுவாமிக்கு தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். நாளை ( 15ம் தேதி) மாலை 4 மணியளவில் பந்தலடி தெய்வநாயகம் தோப்பில் ஊர் பிரமுகர்களுக்கு தாலிகட்டுதல்( பாரதம் ஆரம்பம்) நிகழ்ச்சி நடக்கிறது.

16ம் தேதி சந்தனு சரிதம், இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடக்கிறது.

17ம் தேதி பீஷ்மர் பிறப்பு, இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

18ம் தேதி தர்மர் பிறப்பும், இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

19ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், இரவு 10 மணியளவில் வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

20ம் தேதி பகாசூரன் வதம் செய்தலும், இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

21ம் தேதி பாஞ்சாலி திருமணமும், இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

22ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

23ம் தேதி ராஜசூய யாகம், இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.‌

24ம் தேதி விராடபர்வம் தெய்வநாயகம் தோப்பில் வெள்ளி கால் நடுதலும்,

25ம் தேதி கிருஷ்ணன் தூது, இரவு 10 மணியளவில் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது.

26ம் தேதி காலை அரவான் பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடக்கிறது.

27ம் தேதி மாலை கம்பம் நிறுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.

28ம் தேதி இரவு சுவாமி திருக்கண் திறப்பு நிகழ்ச்சியும், திருநங்கைகள் (அரவாணிகள்) பக்தர்கள் பூசாரிகளின் கையால் தாலி கட்டி கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர்.

29ம் தேதி காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.

மாலை பந்தலடி தெய்வநாயகம் தோப்பில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

30ம் தேதி விடையாத்தி நிகழ்ச்சியும்,

1ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

இத்திருவிழாவில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபடுவர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar